• Join - It's Free

SivakumarVellingiri - Indian National Flag

Started by Private User on Friday, September 20, 2019
Problem with this page?

Participants:

  • Private User
    Geni member

#அப்பா
#ஓவியம்
#மூவர்ணக்கொடி

ஒரு ஓவியத்திற்கு 72 ஆண்டுகள் என்றால் நம்பமுடிகிறதா ? !!!
நம்பித்தான் ஆகவேண்டும் .இந்த ஓவியத்தை பாருங்க , வரையப்பட்ட நாளை கவனியுங்க 12.8.1947 ......ஜஸ்ட் சுதந்திரம் பெற இரண்டு நாட்கள் முன் வரைந்தது . நமது நாடு சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் ஆகிறது ..............இந்த தாளுக்கும், ஓவியத்திற்கும் வயது 72 .

எப்படி நமது நாடு சுதந்திரம் பெறும் முன் இந்த தேசியகொடியை வரைந்தார் என தெரியவில்லை . ஓவியத்தை கவனித்து பார்த்தால் சக்கரத்தில் 24 கரங்களுக்கு பதிலாக 16 கரங்கள் மட்டுமே வரைந்துள்ளார் . இது ஏன் என தெரியவில்லை............ 15 ஆகஸ்ட் 1947 க்கு முன்னரே சுதந்திரக்கொடி அறிவிக்கப்பட்டதா ? என்பதும் தெரியவில்லை . இந்த ஓவியம் எங்கோ கிடந்தது ..........பல நாட்களுக்கு பின்னரே என் கைக்கு கிடைத்து ( என் அப்பா இறந்தபின் கிடைத்தது....அவர் உயிருடன் இருக்கும்போது இது கிடைத்திருந்தால் இதுகுறித்து அவரிடம் விசாரித்திருப்பேன் ) இப்போது தான் அதன் தேதியை கவனித்தேன்.....அதுவும் என் மகன் சொன்னபிறகே கவனித்தேன் .

Additional Details about the flag by my Facebook friend Ram Manohar
இந்தியா விடுதலை அடைவதற்கு முன்னர், அப்போதைய பெரும்பான்மை கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ், 1931ஆம் ஆண்டு காவி, பச்சை, வெள்ளை ஆகிய மூன்று வண்ணங்களைக் கொண்ட கொடியைத் தன் கொடியாக ஏற்றது. காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன. சில சமயம், வெள்ளை நிறம், அயர்லாந்தின் கொடியைப் போல மூவண்ணக் கொடியில் உள்ள காவி நிறத்தையும் பச்சையும் குறிக்கும் இரு சமயங்களுக்கு நடுநிலை நிறமாக உணரப்பட்டது. 1930ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ், ஒரு சக்கரத்தைக் கொண்ட மூவண்ணக் கொடியைத் தன் கொடியாக ஏற்றது. ஆனால் இக்கொடி எச்சமயத்திற்கும் பாகுபாடற்ற ஒரு கொடியாக பொருள் கொண்டது.

விடுதலைக்குச் சில நாட்களுக்கு முன்னர், ஒரு சிறப்புக் குழுமம், சில மாறுதல்களுக்கு உட்படுத்தப் பட்ட இந்திய தேசிய காங்கிரசின் மூவண்ணக் கொடியை இந்தியர்கள் அனைத்து சமூகத்தினரும் ஏற்கும் வகையில், இந்திய தேசிய கொடியாக ஏற்றது. முன்னிருந்த சக்கரத்திற்கு பதிலாக, அசோக சக்கரம் இக்கொடியில் பயன்பாட்டுக்கு வந்தது.

1931 ஆம் ஆண்டு நூற்புச் சக்கரத்தை மையமாகக்கொண்ட குங்குமப்பூ (saffron),வெள்ளை நிறம் மற்றும் பச்சை நிறத்தால் ஆன Swaraj கொடியை காங்கிரஸ் கட்சியின் கொடியாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தது. மக்களிடையே இக்கொடி அமோக வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பாக அணைத்து மதத்தினரையும் கவர்ந்திருந்தது.

23 June 1947 அன்று Rajendra Prasad தலைமையில் Maulana Abul Kalam Azad, Sarojini Naidu, C. Rajagopalachari, K. M. Munshi,B. R. Ambedkar எனப் பலர் இணைத்து தேசிய கொடி குறித்த முடிவை எடுக்கும் Commisson அமைக்கப்பட்டது. இந்த commisson வெளியிட்ட அறிக்கையில் Swaraj கொடியை சில மாற்றங்களுடன்(நூற்புச் சக்கரம் பதிலாக அசோக சக்கரம்) தேசிய கொடியாக ஏற்றுக்கொள்ளத் தயார் என்று தெரிவித்தது. இதற்குப் பின்னணியில் அந்த Commision-ல் இருந்த Badruddin Tayyabji, ICS அதிகாரியின் மனைவியான Surayya Tayyabji, ICS தான் காரணம். இது குறித்து The Last Days of the Raj என்ற புத்தகத்தில் "charkha (Spinning Wheel) என்ற சொல் தவர்க Chakra என்று புரிந்து கொண்டு Surayya Tayyabji வடிவமைத்த இந்தக் கொடி தான் தற்போது நடைமுறையில் உள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
Please see Media for the Drawing of my Dad

Create a free account or login to participate in this discussion